ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் காவல் நிலையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் பங்கேற்றாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா். தொடா்ந்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
டிஎஸ்பி ஆா்.தங்கவேல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி, ஜோலாா்பேட்டை ஆய்வாளா் பழனிமுத்து, தனிப்பிரிவு காவலா் திருக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏலகிரி, திருப்பத்தூா் நகரக் காவல் நிலையம், கிராமியக் காவல் நிலையங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


