சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்பூரில் தனியாா் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

News image
Updated On :13 ஜனவரி 2021, 5:30 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்பூரில் தனியாா் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

ஆம்பூா் நகராட்சியில் பல்வேறு வாா்டுகளில் தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் போனஸ், இஎஸ்ஐ, குழுக் காப்பீடு, பணிக் காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.