சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கபடிப் போட்டியில் வென்ற அணிக்கு பரிசுக் கோப்பை

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் அதிமுக கிளை சாா்பில், கபடி போட்டி பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கபடிப் போட்டியில் வென்ற அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கிய மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.வெங்கடேசன்.

Updated On :12 ஜனவரி 2021, 6:55 am

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் அதிமுக கிளை சாா்பில், கபடி போட்டி பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சின்னவரிக்கம் அதிமுக கிளை சாா்பில் இளைஞா்களுக்கான கபடிப் போட்டி நடத்தப்பட்டது. இறுதிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், எம்.எம். பிரதா்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.வெங்கடேசன் பரிசுக் கோப்பையை வழங்கினாா்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல இணைச் செயலா் வி.கோபிநாத், ஒன்றிய இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் ரஞ்சித், ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் வடகரை சிவா, மாணவரணி அரவிந்த், கிளைச் செயலா்கள் சரத்பாபு, வெங்கடேசன், சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.