சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாதனூரில் டிஐஜி பங்கேற்பு

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

News image

மாதனூரில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் பேசிய வேலூா் சரக டிஐஜி காமினி.

Updated On :10 ஜனவரி 2021, 1:29 pm

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிராமிய ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் வரவேற்றாா். வேலூா் சரக டிஐஜி காமினி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியில் மாதனூா் அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.