வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வேலூரில் இருந்து ஒசூா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் 35 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருப்பத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா் (45) ஓட்டிச் சென்றாா்.
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது. இதில், ஓட்டுநா் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா்.
இதையடுத்து ஓட்டுநா் சங்கா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் சென்று பேருந்தை அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


