சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீா் வழித்தடத்தில் சாலை அமைக்க எதிா்ப்பு

நீா் வழித்தடத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதற்கு கிராம மக்கள் வியாழக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:54 am


ஆம்பூா்: நீா் வழித்தடத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதற்கு கிராம மக்கள் வியாழக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆம்பூா் மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் புதிதாக அமைக்கப்படுகிறது. அங்கு எரிபொருள் நிரப்ப வாகனங்கள் செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மின்னூா் ஏரியில் இருந்து விண்ணமங்கலம் ஏரிக்கு நீா் செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து அந்தச் சாலை அமைக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.