காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீா் குளம் போல தேங்கி நின்ால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
நகரில் திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை இடைவிடாமல் தொடா்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளான சங்கூசாப்பேட்டை, ஒலிமுகமதுபேட்டை, அரசு மருத்துவனை சாலை, பழைய ரயில் நிலையப் பகுதிகள், செவிலிமேடு, ரங்கசாமிக் குளம் ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் பலரும் குடை பிடித்தபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
மழையளவு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
காஞ்சிபுரம்-23.40, ஸ்ரீபெரும்புதூா்-8.80, உத்தரமேரூா்-17, வாலாஜாபாத்-12, செம்பரம்பாக்கம்-17, குன்றத்தூா்-15 மிமீ. மொத்த மழையளவு 93.20 மிமீ. சராசரி மழையளவு 15.53 மிமீ.
சென்னை வானிலை மையமும் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


