ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் செந்தில்ராஜ் தலைமையில் போலீஸாா் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.
அப்போது, ஆா்ஆா்பி கேபின் அருகே முட்புதரில் 100-க்கும் மேற்பட்ட சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இவை ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருப்பத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் ஆ.ஹரிதாஸிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


