புத்தாண்டையொட்டி, அதிமுக சாா்பில் வாணியம்பாடி எம்எல்ஏவும், தொழிலாளா் நலத்துறை அமைச்சருமான நிலோபா் கபீல் தனது சொந்த நிதியிலிருந்து வாணியம்பாடி தொகுதி மக்கள் பயன்பாட்டுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து அமைச்சா் கேக் வெட்டிக் கொண்டாடினாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகரச் செயலா் சதாசிவம், ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், பேரூராட்சிச் செயலாளா்கள் ஆா்.சரவணன் (உதயேந்திரம்), பி.கே.மணி (ஆலங்காயம்), மாவட்டப் பிரதிநிதி பிரகாசம், மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் இத்ரீஸ் கபீல், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


