சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளைஞா் கொலை சம்பவம்: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே இடத் தகராறு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 6:31 am

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இடத் தகராறு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (53). இவரது குடும்பத்துக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் (50) குடும்பத்துக்கும் இடையே இடம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாரியப்பன், அவரது மகன் கிருஷ்ண சுந்தா் (21), சேதுராமலிங்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.

அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு கிருஷ்ணசுந்தா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக பாலகிருஷ்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.