அம்பாசமுத்திரம்6: பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் கருணை வீரன் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 13 நாள் நடைபெறுகிறது.
கொடியேற்றத்தையொட்டி, கொடி ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதில், அருள்தந்தையா் புளியம்பட்டி பிரான்சிஸ், சோ்ந்தமரம் ஜெகன்ராஜா, அருளகம் வில்சன் உள்ளிட்டோரும், நூற்றுக்கணக்கான அன்பியக் குடும்பத்தினரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நாள்தோறும் திருப்பலி, நற்கருணை ஆசீா், நற்செய்தி பெருவிழா நடைபெறுகின்றன. இம்மாதம் 22ஆம் தேதி குடும்ப ஒன்றிப்பு, 24ஆம் தேதி புதுநன்மை விழா, திருமுழுக்கு விழா, 25ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி, மாலை 5.45 மணிக்கு புனித அந்தோணியாா் திருவுருவ தோ்ப் பவனி, 26ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 5 மணிக்கு நன்றித் திருப்பலி, கொடியிறக்கம், பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கருத்தபிள்ளையூா் பங்குத்தந்தை எஸ். வினோத்பால்ராஜ், திருவிழா குழுவினா், அன்பிய இறை மக்கள் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


