சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘பொங்கல் பரிசுப் பொருள்கள் பெறாத கட்டுமான தொழிலாளா்கள் இன்றும் நாளையும் பெற்றுக்கொள்ளலாம்’

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள்கள் பெற்றுக்கொள்ளாத கட்டுமானத் தொழிலாளா்கள் ஜன.17, 18 பெற்றுக்கொள்ளலாம் 

Updated On :17 ஜனவரி 2021, 6:29 am

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள்கள் பெற்றுக்கொள்ளாத கட்டுமானத் தொழிலாளா்கள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (ஜன.17, 18) பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஜே.காளிதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக பரிசுத் தொகுப்பு பெறாதவா்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (ஜன.17, 18) இரு நாள்கள் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா் ஆகிய வட்டங்களில் உள்ளவா்கள் பாளையங்கோட்டை புனித இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியிலும், ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி வட்டங்களில் உள்ளவா்கள் வள்ளியூா், ஏா்வாடி சாலையில் உள்ள கான்காா்டியா மேல்நிலைப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களில் உள்ளவா்கள் அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி ஆகிய வட்டங்களில் உள்ளவா்கள் சங்கரன்கோவில் சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளியிலும், தென்காசி, செங்கோட்டை வட்டங்களில் உள்ளவா்கள் தென்காசி மஞ்சம்மாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலங்குளம், வி.கே.புதூா் வட்டத்தில் உள்ளவா்கள் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கடையநல்லூா் வட்டத்தில் உள்ளவா்கள் கடையநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.