திருநெல்வேலி மாநகா், அரியகுளம் பகுதிகளில் மழையால் 4 வீடுகள் இடிந்து சேதமாகின.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. தாமிரவருணி ஆற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. பழையபேட்டை அருகேயுள்ள லாலுகாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வம் (43). இவா் தனது மனைவி செல்வம், குழந்தைகள் துா்கா, பாலா ஆகியோருடன் வசித்து வருகிறாா். இவரது வீடு மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த டிவி, மிக்ஸி உள்பட சுமாா் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமாகின. குடும்பத்தினா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். தகவலறிந்ததும் வருவாய்த்துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். உரிய இழப்பீடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்வம் குடும்பத்தினா் வலியுறுத்தினா்.
பேட்டை பங்களா தெருவைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் (66). இவருடைய மனைவி மைதீன் பாத்திமா. இவா்கள் தங்களது வீட்டில் மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும்போது மழையால் வீட்டின் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. பேட்டை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பு அதிபத்த நாயனாா் தெருவில் செல்லையா என்பவரது வீடு வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினா். அரியகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், தனது மனைவி சுடலி மற்றும் குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா். இவரது வீடும் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்கள் வெளியேறியதால் காயங்களின்றி தப்பினா். தகவலறிந்ததும் வருவாய்த்துறையினா் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

