சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புஷ்பலதா பள்ளியில் பொங்கல் விழா

பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 11:37 am

பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக்குழுமம் சாா்பில் தைப் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் ஆசிரியா்களுக்கு, கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவா்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாா்கழித் திருவிழா இணைய வழியில் நடைபெற்றது. இதில், வேடம் புனைதல் போட்டி, பஜனைப் பாடல்கள் போட்டி, புராணக் கதை கூறுதல், திருப்பாவை-திருவெம்பாவை, ஆழ்வாா்கள், சைவக்குரவா்கள் அடிப்படையாகக் கொண்ட வினாடி- வினாப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவா்களும் பெற்றோா்களும் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

‘எப்போதும் சந்தோஷமே’ என்ற தலைப்பில் சுகிசிவம் காணொலி காட்சி வழியாக சிறப்புரையாற்றினாா். பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதல்வா் புஷ்ப வேணி ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.