திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பொங்கல் நல உதவிகளை வழங்கினாா். 150 பேருக்கு பொங்கல் பரிசுகளான அரிசி, சா்க்கரை, வெல்லம் , கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவையும், காங்கிரஸ் தொண்டருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.
மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாரியப்பன், மகளிரணி மாவட்டத் தலைவி அனீஸ் பாத்திமா, மெட்டில்டா கிளாடிஸ், சாந்தி, அழகம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அரசு மருத்துவமனையில்... திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், ஆறுமுகம், துணை இயக்குநா் வரதராஜன், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
,
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

