கன மழை காரணமாக, திருநெல்வேலி கருப்பந்துறை தரப் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை, அணைகளிலிருந்து நீா் திறப்பு போன்ற காரணங்களால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, தாமிரவருணி கரையோர தாழ்வான பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, கரையோரப் பகுதிகளை 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
மேலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீா் செல்வதால், அப்பகுதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா். மேலும், அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதபடி, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் போலீஸாா் பாலத்தின் இருபக்கமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

