திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் முதுகுதண்டுவடம் அல்லது தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட நகரும் வண்டி, சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும், சவுதி அரேபியாவில் உயிரிழந்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பெருமாள் நடராஜன் என்பவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக அவரது மனைவி மகாலெட்சுமியுடம் ரூ.5,59, 075க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாந்தி குளோரி எமரால்டு, முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

