திசையன்விளையில் உள்ள தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை சுந்தரவிநாயகா் கோயில் தெரு பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகிறாா்கள். இப்போது அந்த இடத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறி வீடுகளை இடிக்க முயன்று வருகிறாா்களாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திருநெல்வேலியில் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு அப் பகுதி மக்கள் மனு அளிக்க வந்தனா். அப்போது இசக்கியம்மாள் (53) என்ற பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

