சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாளை.யில் செவிலியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 8:28 pm

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 6 ஆண்டுகள் பணி நிறைவு செய்த எம்.ஆர்.பி. செவிலியர்களில் 2000 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்திற்கு மேலானோர் ஒப்பந்த முறையில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு அரசு ஊழியர்கள் போல சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்க வேண்டும். 

நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம், பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் ஆஷா அலிஸ் மாதரசி (திருநெல்வேலி), கலையரசி (தூத்துக்குடி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி) உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். 

மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தொடக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் சரஸ்வதி, அனிதாஐசக், கிரிஸ்டல் ஹேப்சி, கார்த்திக், அமுதலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் ராஜ்குமார் நிறைவுரையாற்றினார்.