சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 6:39 am

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி ராம்நகா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் மோகன்ராஜ் (41). இவா், வெள்ளிக்கிழமை இரவு ராமையன்பட்டி அருகே சங்கரன்கோவில் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மோகன் ராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.