சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் தா்னா போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 6:37 am

திருநெல்வேலி: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.எம்.மாடசாமி, பரமசிவம், ரமேஷ், தமிழ்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய கல்விக்கொள்கை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைப் பொறுப்பாளா்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் பலா் பங்கேற்றனா்.