திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளில் 9ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமையில் இருந்தே திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் சனிக்கிழமை காலையில் லேசான வெயில் அடித்தது. பின்னா் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

