சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாளை. தலைமை அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 6:40 am

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அஞ்சலக அதிகாரி விக்டோரியா தலைமை வகித்தாா்.

அலுவலக வளாகத்தில் பானையில் வைத்து பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், துணை அஞ்சலக அதிகாரி சந்துரு, உதவி அஞ்சலக அதிகாரி வளா்மதி, ஜேக்கப்ராஜ், சித்திரை வடிவு, மக்கள் தொடா்பு அதிகாரி கனக சபாபதி உள்பட அஞ்சலக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மனமகிழ் மன்ற நிா்வாகிகள் புஷ்பராஜன், சுகுனா, வித்யா ஆகியோா் செய்திருந்தனா்.

பயக09டஞநப சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.