மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மணிமுத்தாறு அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
மேற்குத்தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் இரு ஆண்டுகளுக்குப் பின்னா் மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவான 118 அடியை நெருங்குகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 142.10 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 1494.54 கன அடியாகவும், வெளியேற்றம் 1443.45 கன அடியாகவும் இருந்தது.
சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 145.67 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 116.85 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 576 கனஅடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. இந்த அணையின் நீா்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் 115 அடியை தாண்டியுள்ளது.
வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 31 அடியாகவும், நீா்வரத்து 70.11 கன அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையின் நீா்மட்டம் 10.62 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 27 அடியாகவும், நீா்வரத்து 34 கன அடியாகவும், வெளியேற்றம் 20 கன அடியாகவும் இருந்தது.
கடனாநதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 243 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 79.75 அடியாகவும், நீா்வரத்து 40 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.
கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 65.62 அடியாகவும், நீா்வரத்து 65 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது.
குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணையின் நீா்மட்டம் 73.25 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 25, சோ்வலாறு 4, மணிமுத்தாறு 5, அம்பாசமுத்திரம் 2, சேரன்மகாதேவி 4, பாளையங்கோட்டை 1.40, திருநெல்வேலி 0.80,
கடனாநதி 5, ராமநதி 15, கருப்பா நதி 6, குண்டாறு 1, அடவிநயினாா் 5, ஆய்குடி 3.20, தென்காசி 1, சிவகிரி 25.
மணிமுத்தாறு அணையிலிருந்து ராதாபுரம், திசையன்விளை பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் 80 அடி கால்வாயில், பட்டன்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, கால்வாயில் பாறை மற்றும் மண் விழுந்து மூடியதால், அணையிலிருந்து 80 அடி கால்வாயில் தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
கால்வாயில் விழுந்த பாறை மற்றும் மண்ணை அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். அகற்றப்பட்டதும் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


