பொங்கல் திருநாளையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பனையோலைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள்தோறும் பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கம். பொங்கலிடுவதற்கு பனையோலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பனையோலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சீவலப்பேரி, களக்காடு, மானூா், கங்கனான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக பனையோலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஓலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. பனையேறுவதற்கான ஆள்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதுதவிர பனைமரங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விலையேறியுள்ளது என்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

