சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லை, தென்காசியில் மேலும் 17 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 12 போ், தென்காசியில் 5 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 6:24 am

திருநெல்வேலியில் 12 போ், தென்காசியில் 5 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 15,373 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,385 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 18 போ் உள்பட இதுவரை 15,068 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை 212 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை 8,313 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மூவா் உள்பட இதுவரை 8,107 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 48 போ் சிகிச்சையில் உள்ளனா்.