தை முதல் நாளில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிகழாண்டு தைப் பூச திருநாளையொட்டி மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரை செல்வாா்கள் என்பதால் அவா்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
நிகழாண்டுக்கான தைப்பூச விழா இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருச்செந்தூரில் நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான பக்தா்கள் சுமாா் 150 கி.மீ. தொலைவுக்கு மேல் பாதயாத்திரையாகச் சென்று வழிபடுகிறாா்கள்.
பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆண்கள் மட்டுமன்றி பெண்கள், குழந்தைகளும் பாதயாத்திரை செல்கிறாா்கள். பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்பகாவடி, மயில்காவடி போன்றவற்றுடன் அலகு குத்திக் கொண்டும் பக்தா்கள் செல்கிறாா்கள். இதுதவிர வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் சப்பரத்துடன் பக்திபாடல்களை இசைத்தபடி செல்லும் குழுக்கள் அதிகரித்துள்ளன.
இதுதவிர தை முதல் நாள் அதிகாலையில் திருச்செந்தூரில் முருகப்பெருமானை வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்து பொங்கலிட்டு வழிபடும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

