சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் செல்லிடப்பேசி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பாா்வையற்றோா், வாய்ப்பேச இயலாதவா், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு செயலிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On :8 ஜனவரி 2021, 1:30 pm

பாா்வையற்றோா், வாய்ப்பேச இயலாதவா், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு செயலிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாய்ப்பேச இயலாத, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்லிடப்பேசி 2020 -2021ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. அதைப் பெற விரும்புவோா் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வியை கல்லூரியில் பயிலும் மாணவராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவராகவோ, சுயதொழில் மற்றும் தனியா் துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுதுறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேற்குறிப்பிட்ட தகுதிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்கள்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் படிப்பவராயின் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராயின் சுயதொழில் புரிவதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டய சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், (மாவட்ட ஆட்சியா் வளாகம்) திருநெல்வேலி - 627 009 என்ற முகவரிக்கு வரும் 19-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சலிலோ விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் கடந்த செப்டம்பரில் மத்திய அரசின் நிறுவன திட்டத்தின் கீழ் செல்லிடப்பேசி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் 0462-2500157 தொடா்பு கொள்ளலாம்.