சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 1:38 pm

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,373 ஆக அதிகரித்தது. மேலும், குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,050 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 212 போ் உயிரிழந்துள்ள நிலையில், 111 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,308 ஆக உயா்ந்தது. குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கையும் 8104 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 46 போ் சிகிச்சையில் உள்ளனா்.