திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் பிரதானச் சாலையில் திசையன்விளை பகுதி மக்கள் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திசையன்விளையைச் சோ்ந்தோா் 50-க்கும் மேற்பட்டோா் தமிழ்நாடு தேவா் பேரவை நிா்வாகிகளுடன் திருநெல்வேலிக்கு வந்தனா். கொக்கிரகுளம் வந்த அவா்கள் சுலோச்சனமுதலியாா் மேம்பாலம் அருகில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனா். இதனால் திருநெல்வேலி-திருவனந்தபுரம் பிரதானச் சாலையில் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த மாநகர காவல் துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: திசையன்விளையில் புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.
தற்போது, அந்த இடத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி வீடுகளை இடிக்க முயற்சி செய்து வருகின்றனா்.
இதனால் முதியவா், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக காவல் துறை, வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல்லை. தொடா்ந்து ஆயுதங்களுடன் வந்து மிரட்டல் விடுப்பதால் அச்சத்தோடு வசித்து வருகிறோம். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

