சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை சிறப்புக் கூட்டம்

கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சிறப்புக்கூட்டம் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 11:54 am

கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சிறப்புக்கூட்டம் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் மு.கணேசன் தலைமை வகித்தாா். மாநகர அமைப்பாளா் மாடசாமி, கொக்கிரகுளம் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்பாளா் எஸ்.சோமசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஐ.ரெங்கநாதன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், கிராமக் கோயில் பூஜாரிகளின் ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்திய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது; இந்து மதத்தை இழிவாக பேசுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.