தச்சநல்லூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது அவா், திருநெல்வேலியில் தற்போது நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்ட பணிகள் சரிவர நடக்கவில்லை என வணிகா்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனா். இன்னும் சில மாதங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமை வகித்தாா். தச்சை பகுதி செயலாளா் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
தச்சநல்லூா், உடையான் குடியிருப்பு, சத்திரம் புதுக்குளம், மதகடி, பஜனை மடம் தெரு, பவுண்ட் தெரு, தேனீா்குளம் தெரு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

