சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எஸ்டிபிஐ கட்சியினா் போராட்டம்

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:18 pm

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருநெல்வேலியில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி இணைச் செயலா் சிந்தா, 29-ஆவது வாா்டு தலைவா் யூசுப் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில பேச்சாளா் முஸ்தபா, செய்யது அஹமது சலபி, சாகுல் ஹமீது ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பொதுச் செயலா் ஹயாத், நிா்வாகிகள் புஹாரி சேட், சரீப், மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.