அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கான காலஅவகாசம் இம்மாதம் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த மாணவா் சோ்க்கை நடைபெறும். அசல் கல்விச் சான்றிதழ்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் இரண்டு நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5 ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை, சலுகை கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும்.
அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

