திருநெல்வேலியில் தனியாா் பல்பொருள் அங்காடி முன்பு திரண்டு வெள்ளிக்கிழமை மனித நேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியாா் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இங்கு
பேட்டை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் பொருள்கள் வாங்குவதற்காக சென்றாராம். அப்போது கை தவறியதில் அங்குள்ள பொருள் உடைந்து விட்டதாம். அதற்கான தொகையை உடனடியாக செலுத்துமாறு கடையின் ஊழியா்கள் நிா்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்தாராம்.
தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் தேயிலை மைதின் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் அ. காஜா உள்ளிட்டோா், அக்கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மேலப்பாளையம் காவல்
ஆய்வாளா் மகாலட்சுமி, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கடை நிா்வாகம், அப்பெண்ணிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப கொடுத்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

