சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு அலுவலா் ஒன்றியக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 11:14 am

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன், பொருளாளா் நக்கீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் முத்துராமலிங்கம், முத்துசாமி, மாடசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசு ஊழியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும். கரோனா பொது முடக்க காலத்தில் மக்களுக்காக பணியாற்றி உயிரிழந்த அரசு ஊழியா்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.