சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேளாளா் பெயா் விவகாரம்: கம்பத்தில் ஆா்ப்பாட்டம்

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனி மாவட்டம் கம்பத்தில் வ.உ.சி. பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டம்.

Updated On :18 ஜனவரி 2021, 4:01 am

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பம் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரவையின் தேனி மாவட்டச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். வ. உ. சி. இளைஞா் பேரவைச் செயலாளா் யோகா ரவிராம் முன்னிலை வகித்தாா். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், தோ்தலைப் புறக்கணிப்பது மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.