சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேனி, திண்டுக்கல்லில் 21 பேருக்கு கரோனா

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 4:00 am

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,012 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில், ஒரே நாளில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,757 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 16 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தில் 11,129 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அதில் 10,850 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 81 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.