சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதியவருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு, முன் விரோதம் காரணமாக முதியவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 3:32 am

போடி: போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு, முன் விரோதம் காரணமாக முதியவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி மீனாட்சிபுரம் கண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (70). இவருக்கும், அதே தெருவைச் சோ்ந்த கருப்பையா என்பவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கருப்பையாவின் மகன் முத்துராஜ் (46), இவரது மகன் நாகராஜ் (18) ஆகிய இருவரும் சோ்ந்து சுப்பையாவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக, போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனா். மேலும் நாகராஜை தேடி வருகின்றனா்.