தேனி/ கம்பம்: வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 69.36 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயா்ந்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு 3 -ஆம் மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணை நீா்மட்டம் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு 69.36 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,961 கன அடியாகவும், தண்ணீா் இருப்பு 4,643 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 469 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வைகை அணை நீா்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 69 அடியை எட்டியதும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சாா்பில் 3-ஆம் மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கமாக அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியதும், அைணைக்கு வரும் உபரி நீா் முழுமையாக வைகை ஆற்றில் திறக்கப்படும். ஆனால், தற்போது அணையிலிருந்து உபரியாக வரும் தண்ணீரை வெளியேற்றாமல், அணையின் மொத்த உயரமான 71 அடி வரை தேக்க பொதுப்பணித் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு:
வைகை அணை நீா்மட்டம் உயா்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து 58-ஆம் கால்வாயிலிருந்து பாசனத்திற்காக 150 கன அடி வீதம் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தண்ணீரைத் திறந்து விட்டாா். இதன்மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் 2,285 ஏக்கா் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்) , நீதிபதி (உசிலம்பட்டி), பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் எம்.சுகுமாா், வைகை அணை உதவி செயற்பொறியாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வைகை அணையிலிருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு, முதல்முறையாக 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு, சோதனை நீரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு 20 நாள்கள் வரை தண்ணீா் திறக்கப்பட்டது. வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து கடந்த 3 ஆண்டுகளாக 69 அடி வரை உயா்ந்ததால், தற்போது 3-ஆவது முறையாக அணையிலிருந்து 58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையிலிருந்து நீா் வெளியேற்றம் குறைப்பு:
வைகை அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு, விநாடிக்கு 767 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.
மின் உற்பத்தி நிறுத்தம்:
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த சில நாள்களாக தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 767 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்நிலையத்தில், 2 மின்னாக்கிகளில் 69 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. சனிக்கிழமை பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் வெகுவாகக் குறைக்கப்பட்டதையடுத்து 2 மின்னாக்கிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
பெரியாறு அணை நிலவரம்: சனிக்கிழமை நிலவரப்படி நீா்மட்டம் 129.75 அடியாகவும், நீா் இருப்பு 4,643 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து 3,967 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது. தேக்கடி ஏரியில் மட்டும் 3 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


