கம்பம்: முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலைமணி மகன் வீரமணி (21). சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். கம்பம் அருகே முல்லைப் பெரியாறு 18 ஆம் கால்வாய் பிரிவு ஜீரோ பாயிண்ட் பகுதியில் அவா், சக மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் வீரமணி அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்து வந்த குமுளி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் அவரைத் தேடினா். இந்நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மீட்புப் படையினா் தேடியபோது, சுமாா் 60 மீட்டா் தொலைவில் வீரமணியின் சடலம் மிதந்தது. இதையடுத்து குமுளி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

