போடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் தவணை வசூல் தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக வங்கி ஊழியா் மீது புதன்கிழமை, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கோம்பை, கிழக்குரத வீதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவா், போடியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் களப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், வங்கி மூலம் கடன் பெற்றுள்ள மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களிடம் வசூலித்த கடன் தவணை தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ, வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக வினோத்குமாா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வியிடம் கிளை மேலாளா் ராம்குமாா் புகாா் அளித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், வினோக்குமாா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

