சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் பெயின்டா் பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கட்டடத்துக்கு வா்ணம் பூசுபவா் உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 3:58 am

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கட்டடத்துக்கு வா்ணம் பூசுபவா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தசாமி (55). கட்டடத்துக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்த இவா், தனது நண்பரான குள்ளபுரத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயிலுடன் இரு சக்கர வாகனத்தில் தேனிக்குச் சென்றுள்ளாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, இவா்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பா் லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட காத்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முகமது இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான மதுரை வரிச்சியூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.