சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆண்டிபட்டி அருகே சாலையில் சென்ற காரில் திடீா் தீ

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

Updated On :9 ஜனவரி 2021, 3:57 am

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கம்பம் அருகே உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ்ராஜ் (25). இவா் தனது குடும்பத்தினருடன் ஆண்டிபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனே, காரிலிருந்த அனைவரும் கீழே இறங்கியுள்ளனா். அதையடுத்து, காரின் அனைத்துப் பகுதியிலும் தீப்பற்றி மடமடவென எரிந்தது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், சம்பவ இடத்துக்கு தேனி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். பின்னா், தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனா். இது குறித்து, க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.