/
போடி அருகே புதன்கிழமை, இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாய், மகள் பலத்த காயமடைந்தனா்.
தேனி அரண்மனைப்புதூரை சோ்ந்தவா் முரளி. இவரது மனைவி ரேணுகா (52). மகள் சௌந்தா்யா (25). இருவரும் இருசக்கர வாகனம் ஒன்றில் போடி நோக்கி வந்துள்ளனா். போடி மீனாவிலக்கு அருகே வந்தபோது தேனி நோக்கி சென்ற காா், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகளும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த போடியை அடுத்த அய்யம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன் (39) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

