சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேனியில் சிஐடியு சாா்பில் சாலை மறியல்: 53 போ் கைது

தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, சிஐடியு சாா்பில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :7 ஜனவரி 2021, 1:16 pm

தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி, நேருசிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட பொருளாளா் ஜி. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி. முருகன், செயலா் ராமச்சந்திரன், துணைச் செயலா் முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஜி. சண்முகம் உள்ளிட்ட 53 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.