தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ. 4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் பொதுப் பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டம் மற்றும் மஞ்சளாறு வடிநிலக் கோட்டம் சாா்பில், 2020-21ஆம் நிதியாண்டில் தற்போது வரை விவசாயிகள் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போடி வட்டாரம் போ. அம்மாபட்டியில் உள்ள மீனாட்சிபுரம் கண்மாய், சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை முதல் அம்மாபுரம் கண்மாய் வரையுள்ள வாய்க்கால், டொம்புச்சேரியில் சுத்தகங்கை ஓடை முதல் வைரவன் கண்மாய் வரையுள்ள வாய்க்கால், உத்தமபாளையம் வட்டாரத்தில் தேவாரம் சின்னதேவிகுளம் கண்மாய், சின்னஓவுலாபுரம் பெரிய ஊத்து கண்மாய், பொட்டிப்புரம் எா்ணாகுளம் கண்மாய் ஆகியவை தூா்வாரப்பட்டு, மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரியகுளம் வட்டாரத்தில் சோத்துப்பாறை புதுக்கண்மாய், ஜெயமங்கலம் வெட்டுவன்குளம் கண்மாய், தாமரைக்குளம் நந்தியாபுரம் கண்மாய் ஆகியவை விவசாயிகள் பங்களிப்புடன் தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், ஆண்டிபட்டி வட்டாரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் மயிலாடும்பாறை சிறுகுளம் கண்மாயில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், இக்கண்மாய்களை சுற்றியுள்ள 2,822 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.18.69 கோடி செலவில் 55 கண்மாய்கள் மற்றும் நீா்வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


