சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சண்முகாநதி அணை பாசனக் கால்வாயை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணையின் பாசனக்கால்வாயை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:58 am

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணையின் பாசனக்கால்வாயை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி நீா் தேக்கம் 52.50 அடி உயரத்தில் அமைத்துள்ளது.

இந்த அணைக்கு மேற்குத்தொடா்ச்சி மலையில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை தேக்கப்படும். ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி,கன்னிச்சோ்வைபட்டி மற்றும் ஓடைப்பட்டி வரையிலுள்ள பல கிராமங்கள் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்கிறது. சுமாா் 19 கிலோ மீட்டா் தூரம் வரையிலுள்ள பாசனக் கால்வாயில் திறக்கப்படும் நீரால் 1640 ஏக்கா் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பா் 16 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தாா். ஆனால், சில கிலோ மீட்டா் தூரம் வரையில் கூட தண்ணீா் செல்லமுடியாமல் பாசன நீா் வீணாகி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் , சண்முகாநதி அணை நீா் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீா் 10 க்கும் மேற்பட்ட குளங்களில் தேக்கப்படும். அதன் மூலமாக விவசாயப்பணிகள் நடைபெறும். ஆனால், கடந்த 4 ஆண்டுக்கு மேலாக பாசனக்கால்வாயை தூா்வாராத நிலையில் பருவமழை கைகொடுத்தும் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கவில்லை. எனவே, ராயப்பன்பட்டி உள்பட அதனை சுற்றிபகுதியில் மானாவாரி விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவருகிறது. நீா் வசதி இருந்தும் அதனை முறையாக பரமரிப்பு செய்யாத நிலையில் வேளாண் விவசாயத்தை நம்பியுள்ள ஏரளாமான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.