தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (30). டிராக்டா் ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கிவிட்டாராம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்தபோது பழனிச்சாமி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீஸாா் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

