சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காதல் திருமணம் செய்த இளைஞா் தற்கொலை

தேனி அருகே அன்னஞ்சியில் காதல் திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :3 ஜனவரி 2021, 3:21 am

தேனி: தேனி அருகே அன்னஞ்சியில் காதல் திருமணம் செய்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னமனூா் அருகே கீழபூலானந்தபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேல் (26). அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (24). இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜாதியைக் காரணம் காட்டி கிருஷ்ணவேல் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கடந்த 2018, டிச.16-ஆம் தேதி ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் பேச்சியம்மாள் புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியிருந்த நிலையில் கிருஷ்ணவேல், பேச்சியம்மாள் ஆகியோரிடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2020, டிச.15-ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு அன்னஞ்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில், பேச்சியம்மாள் வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்றிருந்த நேரத்தில், கிருஷ்ணவேல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.